Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாடுகள் அசை போடுவதுபோல்! பெற்ற தாய்
முதல் பக்கம் » ராமகிருஷ்ண உபநிஷதம்
உய்யும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2015
05:08

ஜனக மகாராஜா இருக்கவில்லையா? அவரைப் போலவே நானும் உலக வாழ்க்கையிலிருந்து கொண்டே ஞானியாகலாம் என்று சிலர் பேசுவதுண்டு. அப்படிப் பேசுபவர்கள் உலகத்தில் ஒரு ஜனகர்தான் இருந்தார் என்பதை மறந்து விடுகிறார்கள். ஜனகருக்குப் பின் அவரைப்போல் எத்தனை பேர் உலகத்தில் உண்டானார்கள்?

உலக வாழ்க்கையில் இருந்துகொண்டே பற்று இன்றிக் கடமைகளை நிறைவேற்றும் ஞானவானாக இருக்க வேண்டுமானால் கொஞ்ச காலமாவது தனியாக இருந்து தியானத்தில் அமரவேண்டும். ஒரு வருஷம் அல்லது ஆறு மாதம் அல்லது ஒரு மாதம், குறைந்த பட்சம் பன்னிரண்டு நாளாவது இதற்குச் செலவழிக்க வேண்டும். அந்தக் காலத்தில் இடைவிடாமல் பகவானை நினைவில் வைத்துக்கொண்டு அவன் அருளைப் பெறவேண்டி உள்ளத்தைச் செலுத்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும். உலகத்தில் உனது என்று நினைக்கும் படியான பொருள் ஏது? ஒன்றுமில்லை. இதை மனதில் ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டும். உன்னுடைய பொருள் என்று எண்ணக் கூடிய ஒவ்வொன்றும், ஒரு நாள் அல்லது வேறு ஒரு நாள் அழிந்து மறைந்து போகும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நமக்கு இருக்கும் உறுதியான பொருள் ஒன்றேதான். அதுஆண்டவன். நமக்குள்ள அழியாத பொருள் அவன் ஒருவனே. அனைத்துக்கும் கடவுள் ஒன்றே ஆதரவு. அவனே அனைத்தும் தியானம் செய்து பகவானை எப்படி அடைவேன் என்று  சிந்தித்துச் சிந்தித்து மனதை நிர்மலப்படுத்திக் கொள்ள வேண்டும். அவனை அடைவதே ஆசையாகவும் கவலையாகவும் வைத்துக் கொண்டு தியானம் செய். தியானம் பண்ணும் காலத்தில் தியானத்தையும் பக்தியையும் பரிகசிப்பவர்களுடன் சேராமல் இருக்க வேண்டும். பக்தி செய்வதை இகழ்வோர்களுடைய கூட்டுறவு வைத்துக் கொள்ள வேண்டாம். பக்தர்களை அவமதிப்பவர்கள் அல்லது பரிகாசம் செய்பவர்கள் - இவர்களுடைய சகவாசத்தை நீக்க வேண்டும்.

உள்ளம் நிலை தவறிப் போகும்படியான சந்தர்ப்பங்களில் ஜகன்மாதாவை வேண்டிக்கொள். அவள் உன்னைக் காப்பாற்றுவாள். உள்ளத்துக்குள்ளே மறைந்து நிற்கும் பாபங்களினின்று அவள் உன்னைத் தப்புவிப்பாள். பக்கத்தில் ஈசுவரி நிற்கிறாள் என்பதை அடிக்கடி நினைவுக்குத் தந்துகொள். அப்படிச் செய்தால் பாப எண்ணங்களினின்றும் பாப காரியங்களினின்றும் வெட்கப்பட்டு விலகுவாய். தியானம் செய்து அருள் பெற்றவன் எந்தப் பதவியிலிருப்பினும் எந்தக் கஷ்டம் அல்லது சுகபோகம் நேரிடினும் கலக்கமின்றி நேர்மையான வழியில் நடந்து கொள்ளுவான். தன் கடமைகளை அடக்கத்துடனும் சாதுர்யத்துடனும் செய்து தீர்ப்பான். தெய்வ பக்தியும் மக்களிடம் அன்பும் காரியங்களில் நேர்மையும் அவனிடம் பார்க்கலாம். லௌகிக சாதுர்யத்தில் மற்றவர்களைவிட அவன் எந்த விதத்திலும் குறைவாயிருக்க மாட்டான். எல்லாக் காரியங்களையும் ஒழுங்காகச் செய்வான். கல்வி கற்றவர்கள் மத்தியில் அவனும் கற்றவனாகவே இருப்பான்.

வாதப் பிரதிவாதம் செய்வதில் மற்றவர்களைப் போலவே அவனும் நன்றாகச் செய்வான். தாய் தகப்பன்மார்களிடத்தில் அடக்கத்துடனும் அன்புடனும் ஒரு குறையுமின்றி நடந்துகொள்வான். நண்பர்களிடத்திலும் தன் சுற்றத்தாரர்களிடத்திலும் மிகப் பிரியமாக இருப்பான். பேச்சு, இனிமையாகப் பேசுவான். உபகார சுபாவத்துடன் நடந்து கொண்டு எல்லோருடைய மதிப்பையும் அன்பையும் பெறுவான். மனைவிக்குப் பிரீதியே உருவெடுத்தாற் போன்ற கணவனாவான். இத்தகைய மனிதனே இல்லறத்தில் இருந்துகொண்டு உலக வாழ்க்கை நடத்தி வந்தாலும் ஞானம் அடைந்தவன் என்று கருதப்படுவான். பகவான் ராமகிருஷ்ணருடைய உபதேசங்கள் வெறும் சாஸ்திரம் அன்று. தம்அனுபவத்தில் சரி என்று கண்டு அனைவரும் அனுஷ்டிக்கத் தகுந்த வழி என்று அவர் ஆராய்ந்து அறிந்து சொல்லும் உண்மை. தேவி பக்கத்திலே நிற்கிறாள். அவளைச் சரண்புகு, எல்லாம் அடைவாய். உன்னைப் பாபத்திலிருந்து காப்பாள் - என்று அவர் அனுபவத்தில் கண்டு நமக்கும் சொல்கிறார். அதை உணர்ந்து நாம் கடந்து கொண்டால், நாமும் உய்வோம், நாடும் செழிக்கும்.

 
மேலும் ராமகிருஷ்ண உபநிஷதம் »
temple news
ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. பழைய காலத்து ... மேலும்
 
temple news
பல்வேறு வழிகளில் நாம் கடவுளை உபாசித்துக்காட்சியும் அருளும் பெறலாம். ஆற்றங்கரையில் பல படித்துறைகள் ... மேலும்
 
temple news
பெரிய வியாபாரி ஒருவர் பரமஹம்ஸரிடம் வந்து சுவாமி! நான் என்னுடைய சொத்தெல்லாதவற்றையும் குடும்பத்துக்கு ... மேலும்
 
temple news
சித்த சுத்தி: அழகிய ஒரு ஸ்திரீயைப் பார்க்கும்போது உலக மாதாவான தேவியைத் தியானிக்க வேண்டும். முன் ... மேலும்
 
temple news
சாஸ்திரங்களும் புராணங்களும் படித்த ஒரு பிராமணர் அரசனிடம்போய் அரண்மனையில் புராணம் வாசித்துச் சொல்லத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar