‘சிவாய நம: சிவாய நம: ’ என்று 5 நிமிஷம் அக்ஷரங்களை மனதில் வைத்து ஜபித்த பின் ‘நாராயண என்னும் குருவாயூரப்பனின் திவ்ய மங்களமான நாமாவை 3 மணி நேரத்துக்கு குறையாமல் ஜபித்து விட்டு பூஜ்ய ஆதிசங்கர பகவத் பாதாள் அனுக்ரஹித்த ‘ஹனுமத் பஞ்ச ரத்னத்தை ’ 108 தடவை பாராயணம் செய்வது மூலம் நிச்சயம் எல்லா க்லேசங்களும் நீங்குவது மட்டுமின்றி ஆனந்தமும் உண்டாகும்.
தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜம் அத்ராக்ஷம் (ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னத்தில் உள்ள ச்லோகம்)
வஸ்த்ரதாரணம் சாஸ்த்ரத்தில் சொல்லியபடி இருந்தால் சீக்கிரத்தில் பயன் ஏற்படும்.
கிடைத்தற்கரிய மானிட ஜன்மாவை பகவான் நமக்குக் கொடுத்தது மீண்டும் ஜன்மம் ஏற்படாமல் செய்து கொள்ளத்தான். நாம் இந்தப் பிறவியில் உள்ள க்லேசம் காரணமாக இதையே நினைத்து வருந்துவதால் ‘கடைசி நேரத்தில் எந்த விஷயம் மனதில் உள்ளதோ அது தான் மறு ஜன்மத்தில் அமையும் ’ என்கிற கீதை வசனப்படி நமக்கு அந்தப்பிறவி மீண்டும் வந்து விடும். ஆகையால் முன்கூறிய படி செய்து வந்தால் இப்பிறவியில் உள்ள க்லேசம் முழுமையும் நிவ்ருத்தியாகாவிடினும் (வினை கடுமையாக இருந்தால்) பகவத் க்ருபையால் ஏளனம் ஸமூகத்தில் ஏற்படாமல் இருக்கும்.
மேற்படி விஷயம் எழுதியதற்கு பிரமாண வாக்யம் ஸ்ரீமந் நாராயணீயத்தில் 3ம் தசகம் 3ம் சுலோகம், குருவாயூரப்பா, உன் க்ருபை ஏற்பட்டால் எது தான் மனித வர்க்கதிற்கு கைவராது. என ஒருவனின் குறையை போக்குவதில் உமக்கு என்ன சிரமம். 3ம் தசகம் 10ம் சுலோகம். அப்பேர்ப்பட்ட பகவானின் க்ருபை ஏற்படும் வரை மனோ, வாக், காயங்களால் (மனம், சொல், செயல்) நாம் வழிபாடு செய்ய வேண்டும். நாள் போய்க் கொண்டே இருக்கிறதே, ஸமூகத்தில் உள்ள நமக்கு சில காரியங்கள் ஆக வேண்டுமே என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அவரே பதில் தருகிறார். உன் பக்தியைக் கடல் போல் எனக்குக் கொடுப்பாயானால் அந்த அபார பக்தியே எல்லாத் துன்பங்களையும் போக்கி விடும். இதில் வியாஸர், நாரதர் போன்ற மஹான்களுடைய வாக்கும் பகவத் கீதையில் பகவானுடைய வாக்கும் பிரமாணம்.
தற்காலத்தில் பொதுவாக ஜனங்கள் தங்கள் கஷ்ட நிவ்ருத்திக்காகவும் தங்கள் இஷ்டம் கூடுவதற்காகவும் ஏதேனும் நல்ல காரியம் செய்ய ஆசைப்பட்டு சில பேர்களை நாடும் போது அவர்கள் தன்னலம் காரணமாக அதிக பணச்செலவு உள்ளதாயும் கஷ்டப்பட்டு செய்யக்கூடியதாயும் செய்யச் சொல்லுகிறார்கள்.
ஸ்ரீமத் பாகவதப்படி பகவானுடைய நாம ஜபத்தால் எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். எல்லா இஷ்டங்களும் கைகூடும். அதோடு மட்டும் இல்லாமல் பகவத் பாதாள் அனுக்ரஹித்த வழிப்படி 6 தெய்வங்களில் எந்த தெய்வம் தன் இஷ்ட தெய்வமோ அந்தத் தெய்வத்தின் திரு நாமத்தை 1 மணி ஜபம் செய்து விட்டுப் பிறகு எப்போதும் எங்கும் சொல்லி வந்தால் அவரவர்களின் கஷ்டமும் நீங்கி இஷ்டமும் கைகூடி உலகியலில் உள்ள பற்றும் விலகி அருளியலில் பற்று ஏற்படுவதால் மனம் நிம்மதி அடையும்.
என்ற நாம ஜபம் செய்வது மிகவும் சிரேஷ்டம், ஏனெனில் கலி ஸந்தரண உபநிஷத்தில் மேற்படியுள்ள நாமத்தை 3 -1/2 கோடி ஜபிப்பவன் ஜீவன் முக்தனாக ஆவான் என்று சொல்லியுள்ளது.