கீதையில் ‘கஹனா கர்மணோ கதி: ’ என்று ப்ரபு சொன்னார். அதாவது கர்மபலத்தின் நிலையை அறிவது கடினம் ஆகையால் நாம் (கர்மா) எந்த அளவுக்கு முன் பிறவியிலேயோ அல்லது இப்பிறவியிலேயோ செய்திருப்போம் என்று தெரியாது. இப்பிறவியில் நாம் செய்யும் பாராயணம் மட்டும் உள்ளது. அதனை எந்த அளவுக்கு பகவான் ஒப்புக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரியாது. க்ருபா ஸமுத்ரமான பகவானிடத்தில் நாம் செய்த புண்ய பாபத்தைக் கவனிக்காமல் ‘ப்ரபோ உன் க்ருபை ஒன்றையே உபாயமாகக் கொண்டு வேண்டுகிறேன். என்னைக் காப்பாற்று!’ என்று வேண்டுவது தான் மிகவும் உசிதம். ‘அயி க்ருபாலய பாலய மாம ஜகதேகபதே!’ என்று எவ்வளவு தடவை சொல்லி வேண்ட முடியுமோ அப்படிச் செய்தால் மனம் சாந்தி அடையும். ஸ்ரீமந் நாராயணீயத்தை எப்போதும் அனுஸந்தானம் செய்ய முடியாமல் இருக்கிறதோ அப்போது:
என்ற வ்யாஸ ப்ரதிக்ஞை வசனத்தை ஒரு தடவை சொல்லிவிட்டு ‘அச்யுதானந்த கோவிந்த ’ என்று எவ்வளவு முடியுமோ ஜபித்து மீண்டும் ஒருமுறை வியாஸ ப்ரதிக்ஞை வசனத்தைச் சொல்லி வரவும் எல்லாவற்றிற்கும் மேலாக ‘அயி க்ருபாலய பாலய மாம் ஜகதேகபதே என்று பிரார்த்தனை செய்வது தான் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் செய்துள்ள வினை எவ்வளவு என்று தெரியாததாலும், எவ்வளவு புண்யம் இப்பிறவியில் செய்கிறோம், எந்த அளவுக்கு நம் வினையை அது போக்கவல்லது என்றும் தெரியாததால் அவனுடைய கிருபை ஒன்றையே உபாயமாகக் கொண்ட இந்த முறை தான் நல்லது. இதற்கு எண்ணிக்கை தேவையில்லை முடிந்தது செய்தால் போதும்.
தன்வந்தரி மந்த்ரமாகக் கேரளத்தில் கருதப்படும் இந்த நாம மந்த்ரத்தை 8 தடவை சொல்லி ‘என் நோய்கள் அனைத்தையும் உடனடியாகப் போக்கி அருளல் வேண்டும்; என்று ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.