பதிவு செய்த நாள்
30
அக்
2018
02:10
1963 ஸப்தாஹம் ஆரம்பம். அப்போது 4 விஷயங்களை பிரகாசமாக எழுதி மாட்டச் சொன்னது.
1. ‘அம்ருதத்வாய மாம்பஜ’ (ஸ்ரீமத் பாகவதம் 3-24-38) கருத்து: - என்னை (பகவானை) மோக்ஷம் அடைய அதாவது மீண்டும் பிறவியில்லாமல் இருக்க ஆராதனம் செய்.
2. ‘மயி பக்திர்ஹி பூதானாம் அம்ருதத்வாய கல்பதே ’ (10-82-45)
கருத்து: எந்த ஜீவனுக்காகிலும் என்னிடம் பக்தி ஏற்பட்டால் மோக்ஷத்தை அடைவிக்கும் ஞானத்திற்காக ஆகும் அன்றோ.
3. ‘நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின் ’ கீதை 11ம் 33வது சுலோகத்தில் உள்ளது.
கருத்து: நீ ஒரு கருவி தான். என்னால் எல்லாம் முன்னமேயே ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.
4. ‘கிமலப்யம் பகவதி ப்ரஸன்னே ஸ்ரீநிகேதனே ’ (10/39/2)
கருத்து: லக்ஷ்மி ரமணனான பகவான் ப்ரசன்னமானால் எது தான் கிடைக்காது. எல்லாம் கிடைக்கும் என்று பொருள்.
சிறிய வயதிலேயே பகவத் பஜனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் 10 நிமிஷம் முதல் 30 நிமிஷம் வரை நாம சங்கீர்த்தனம், ஸ்தோத்ர பாராயணங்களை (ஷண்மத ஸ்தோத்ரங்களை) செய்து வந்தால் வயது ஆகிறபோது நிறைய ஆவர்த்தி நடந்திருக்கும். க்ஷேமம் ஏற்படும். எது போல என்றால் சிறிய வயதிலேயே (ஐணண்தணூச்ணஞிஞு ணீணிடூடிஞிதூ) எடுத்துக் கொண்டால் (கணூஞுட்டிதட்) ரொம்ப குறைவாக இருக்கும் வயதான பிறகு எடுத்துக் கொண்டால் (கணூஞுட்டிதட்) அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். ஆகையால் சிறிய வயதில் ஆரம்பித்தால் தினம் கொஞ்சமாக செய்தாலே வயதான பிறகு புண்ணியம் சேர்ந்து நிறைய பஜனம் செய்யும் எண்ணமும், க்ஷேமமும் அடையலாம்.
எந்த காரியங்களும் விக்னம் இல்லாமல் நடப்பதற்கு கீழ்கண்ட ச்லோகத்தை 63 தடவை சொல்லி வந்தால் (விக்னேச்வரருடைய 16 நாமங்கள் அடங்கிய ச்லோகம் 16#63=1008 தடவை நாமங்கள் சொன்னதாக ஆகும். நல்லது என்று உபதேசம் செய்து நிறைய பக்தர்கள் தினமும் காலை இந்த மாதிரி 63 தடவை ச்லோகத்தை சொல்லி எந்த காரியங்களும் நல்லபடியாக நடந்து வருகிறது என்று மனதில் நிம்மதியுடன் இருந்து வருகிறார்கள். இந்த 16 நாமங்களில் பெருமைகளைப் பற்றி ரொம்ப விரிவாக மஹா பெரியவாள் உபந்யாசம் செய்திருக்கிறார்.
1. ‘ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச
கபிலோ கஜகர்ணக:
ஸம்போதரஸ்ச விகடோ
விக்னராஜோ விநாயக:
தூம்ரகேதுர்கநாத்யக்ஷ:
பாலசந்த்ரோ கஜாநந:
வக்ரதுண்ட: சூர்பகர்ண:
ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:’
இதை 63 தடவை சொல்லிவிட்டுக் கடைசியில் கீழ்க்கண்ட பலஸ்ச்ருதி ச்லோகத்தை ஒரு தடவை சொல்லி பூர்த்தி செய்ய வேண்டும்.
‘:கலாஸங்க்யாணி நாமானி ய: படேத்ச்ருணுயாதபி
வித்யாரம்பே விவாஹேச ப்ரவேசே நிர்கமேததா
ஸங்க்ராமே ஸர்வகார்யேஷு
விக்னஸ்தஸ்ய ந ஜாயதே !!’
2. ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
வாயுபுத்ரோ மஹாபல
ராமேஷ்ட: பல்குணஸக:
பிங்காக்ஷ: அமிதவிக்ரம:
உததிக்ரமணஸ்சைவ
ஸீதாசோகவிநாசந:
லக்ஷ்மணப்ராணதாதாச
தசக்ரீவஸ்ய தர்பஹா
த்வாதசைதானி நாமானி
கபீந்த்ரஸ்ய மஹாத்மன:
ஸ்வாபகாலே படேந்நித்யம்
யாத்ராகாலே விசேஷத:
தஸ்யம்ருத்யு பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயீபவேத்
அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித!
இந்த ச்லோகத்தை (ஆஞ்ஜனேயரின் 12 நாமங்கள்) வீட்டைவிட்டு வெளியில் போகும் போதும், கார், ஸ்கூட்டர் முதலியவைகளை ஒட்ட எடுக்கும் போதும் இரவில் படுக்கப் போகும் போதும் சொல்ல வேண்டியது, மரண பயம் நீங்கும்.
ஸ்வாமிகள் பக்தியின் பெருமையை வர்ணிக்கும் போது கூடவே பக்தனுக்கு சத்யம், தர்மம், தயை, விவேகம் போன்ற முக்கியமான ஆத்ம குணங்களைக் கடைப்பிடித்தல், பர-ஸ்த்ரீ ஸங்கம் இல்லாதிருத்தல், புகழ், பணம், பதவி இவைகளில் ஈடுபாடு இல்லாதிருத்தல், இவை இருந்தால் தான் பக்தி ஸித்திக்கும். உலகியளில் பற்றுதல் போய் பகவத் கிருபையால் க்ஷேமத்தை அடையலாம் என்பார்.
இந்தக் கலியில் ஆசார அனுஷ்டானங்களை ஜனங்கள் சரியாக கடைப்பிடிக்க இயலாததால் அவரவர்களுடைய ஸ்வதர்மத்தை முடிந்த வரையில் செய்து கொண்டு ஏதாவது ஒரு பகவந் நாமாவை (எந்த தெய்வத்திடம் ஈடுபாடு உள்ளதோ) எப்பொழுதும் முடிந்த வரையில் ஜபித்துக் கொண்டும், படிக்க வசதி உள்ள புருஷர்கள் தன் வீட்டில் ராமாயண, பாகவத, நராராயணீயம், கீதை, விஷ்ணு ஸஹஸ்ராமத்தை (பஞ்சரத்னம் என்று ஸ்வாமிகளால் சொல்லப்படும்) பாராயணம் செய்து கொண்டும் வந்தால் அவர்களும் அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் க்ஷேமத்துடனும் மனஸ் சாந்தியுடனும் இருப்பதுமல்லாமல் லோகமே க்ஷேமமாக இருக்கும் என்ற தீர்மானத்துடன் ஸ்வாமிகள் தன்னிடம் வருபவர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லிக் கடைப்பிடிக்கும்படி அனுக்ரஹிப்பது வழக்கம். விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் மஹிமையை, பலஸ்துதியில் சொல்லியிருக்கும் ச்லோகங்கள் எல்லாம் மிகை இல்லை. உண்மையானது என்றும் ஆதிசங்கரர் பாஷ்யத்தில் எழுதியிருப்பதையும் சொல்லி தன்னிடத்தில் வரும் பக்தர்களை தினம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தடவை சொல்லி வரும்படி அனுக்ரஹித்து இருக்கிறார். இந்த ஒரு ஸ்தோத்ரமே எல்லாவற்றிற்கும் மேல் என்பார்.
ஸ்õவமிகளின் வார்த்தையைக் கேட்டு நிறைய பக்தர்கள் தினம் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தையும் துர்கா சந்திரகலா ஸ்துதியையும் பாராயணம் செய்து வருகிறார்கள். நிறைய மாணவ, மாணவிகள் தினம் 1008 தடவை ‘அபராஜித பிங்காஷ நமஸ்தே ராம பூஜித ’ வை சொல்லி பரீக்ஷையில் நிறைய மதிப்பெண்கள் வாங்கியும் நல்ல உத்யோகத்தில் அமர்ந்தும் பெண்களுக்கு விவாஹம் ஆகியும் நல்லபடியாக இருக்கிறார்கள். அநேகம் பேர் 3 லக்ஷம் தடவை ஜபித்து காரி ஸித்தி பெற்று இருக்கிறார்கள்.
குறிப்பு: ஆதித்ய ஹ்ருதயம், பகவத் கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ராமாயணம், பாகவதம், பாரதம் ஆகியவற்றின் மூலங்களில் (Oணூடிஞ்டிணச்டூ கூஞுதுt) ஸ்தீரிகள் நேரடியாக ஈடுபடுவது சரியல்ல என்பது காஞ்சி மஹாபெரியவாளின் அபிப்ராயத்தை அநுஸரித்து ஸ்வாமிகள் அடிக்கடி எடுத்துச் சொல்லும் விஷயம். அதற்கு பதிலாக நாம ஜபம், சங்கரர் இயற்றியுள்ள ஸ்தோத்ர க்ரந்தங்கள், மூகபஞ்சசதி, ஸ்ரீமந் நாராயணீயம் அபிராமி அந்தாதி முதலிய மஹான்களால் அருளப்பட்ட க்ரந்தங்களில் ஈடுபடுவது நலம்.