தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் ஸ்வாமிகள் சொன்ன சில முக்கிய விஷயங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2018 02:10
1. மஹா பெரியவா ஒரு முறை என்னைப் பற்றி ஒருவரிடம் ‘அவனுக்கு குருவாயூரப்பனிடம் எவ்வளவு பிரியமோ, என்னிடத்திலும் அவ்வளவு பிரியம் ’ என்று சொன்னார். பெரியவா வாயால் இப்படி சொல்லணும் என்றால் எவ்வளவு பாக்கியம்.
2. ‘ஸமலோஷ்டாஷ்ம காஞ்சன ’ (மண்கட்டி, கல், பொன் இவைகளை சமமாக பாவிக்கிறவர்) இப்படி இரண்டு பேர் தான் இருந்தார்கள். ஒருவர் மஹா பெரியவர். இன்னொருவர் சிவன் சார்.
3. சிவன் சார் ஒரு சமயம் என்னிடம் ‘ என்னை ஏதோ மேதாவி என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. பகவான் (ஈடிஞிச்tஞு) பண்ணினார். நான் எழுதினேன் ’ என்று சொன்னார். ஒரு சமயம் அவரை யாரோ அணுகி, ‘நீங்க உங்க புத்தகத்தில் லண்டனில் இருக்கும் ஒரு தெருப் பெயரை குறிப்பிட்டு இருக்கிறீர்களே! அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை ’ என்று கேட்டாராம். அதற்கு சார் ‘நன்றாக விசாரித்து பார் ’ என்றாராம். விசாரித்ததில் சார் குறிப்பிட்டிருந்த பெயர் தான் முதலில் இருந்ததாக தெரிய வந்தது.
4. நம்ம மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லும் விஷயங்களெல்லாம் அவர் படித்து விட்டு சொன்னாரா? படித்து விட்டு சொன்னால் இப்படி பேச முடியுமா? பூஜை, மடத்து நிர்வாகம் இவற்றுக்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. எப்பொழுது உட்கார்ந்து இதையெல்லாம் படிச்சார்? இதெல்லாம் படித்து வருவதில்லை. அவர் ஆதிசங்கரரை பற்றிச் சொல்லும் போது ‘ 12 வயதில் பாஷ்யக்ரந்தங்கள் எழுதுவதென்றால் சாமான்யமான காரியமா? படித்து வருவதில்லை இதெல்லாம் ’ என்பார். அதையே தான் அவரைப் பற்றி சொல்லும் போது சொல்வேன்.
5. நம்ம மஹா பெரியவா, சிவன் சார் இவர்களெல்லாம் எந்த தேசத்திற்கும் போகாமல் அந்தந்த தேசங்களைப் பற்றி துல்யமாக சொல்வார்கள். இப்படித்தான் ரமண மஹரிஷி ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஒருவரிடம் அங்குள்ள ஒரு மலையைப் பற்றி கூறி அதன் சமீபத்தில் உள்ள மறைவான இடத்தையும் கூறி அங்கு அவரை த்யானம் செய்ய சொன்னார். ரமண மஹரிஷி திருவண்ணாமலையை விட்டு எங்கும் வெளியே சென்றதில்லை.
6. நான் மஹா பெரியவாளிடம் சொல்லும் போதெல்லாம் கைகூப்பிக் கொண்டும், தோடகாஷ்டகத்தின் கடைசி ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டும் தான் சொல்வேன். அதனால் தான் அவர் என்னை சோதிப்பது போலான கேள்விகளை கேட்டதில்லை. மற்ற பண்டிதர்களை அவ்வாறு சோதித்திருக்கிறார்.
7. நான் ஒருமுறை பெரியவா முன்னிலையில் சப்தாஹம் செய்த போது, கடைசி நாளன்று அவப்ருத ஸ்நானம் செய்வதற்காக பெரியவா வருகைக்காக காத்திருந்தேன். பெரியவா ஸ்நானம் செய்த பின் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பெரியவா, நான் ஸ்நானம் செய்த பின் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார்.
8. பல பண்டிதர்களை கவுரவிக்கும் போது பிர்லா ஒரு மஹா பண்டிதரை கவுரவிக்கவில்லையாம். அந்த பண்டிதரை பார்த்து, ‘உனக்கு தோடா போடவில்லை என்று வருத்தமா? தோடா என்றால் ஹிந்தியில் சிறியது என்று அர்த்தம் ’ என்று மஹா பெரியவா சமாதானப்படுத்தினார்.
9. நேர்மையில்லாமல் என்ன பஜனம் பண்ணினாலும் பயன் இல்லை, நேர்மையாக இருப்பதென்றால்
1. பொய் சொல்லக்கூடாது
2. பொறாமை படக்கூடாது
3. அஹங்காரம் இருக்கக்கூடாது
இவை, எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம். நம் நாட்டில் நேர்மையாக இருப்பது கஷ்டம் தான். ஆனால் வெளி நாட்டிற்குப் போவது சாஸ்திர விரோதமாகும். அதனால் அங்கே போகக்கூடாது . பாரத தேசத்தில் கர்மா செய்தால் தான் சொல்லும். இது பாகவதத்தில் இருக்கு. இங்கு நேர்மையாக இருப்பது முடியாத காரியமாகிவிட்டாலும் இங்கே இருந்து கொண்டு நம்மால் முடியும் மட்டும் நேர்மையாக இருந்து பகவானிடம் முறையிட்டால் அவர் காலகிரமத்தில் தூக்கிவிடுவார்.
(ஏதூணீணிஞிணூடிண்தூ) இருக்கக்கூடாது. அது இருந்தால் பகவானை அடைய முடியாது. நம்ம சிவன் சார் இதைத்தான் கண்டித்திருக்கிறார். நானும் இதை தான் வெறுக்கிறேன். நாராயணீயத்தில் ‘நிர்மாயமேவ ’ என்று வருகிறதல்லவா, அதற்கு (‘ஏதூணீணிஞிணூடிண்தூ’) இல்லாமலேயே என்ற தான் அர்த்தம்.
10. 1975ல் ஆண்டில் நான் குருவாயூரில் தங்கி 48 நாட்கள் உபவாசம் இருந்தேன். கடைசி நாள் அன்று வி.ஜே.ஆர். க்கு அஜாமிள உபாக்யானம் சொன்னேன். அதில் 10 வது ச்லோகம் ரொம்ப முக்கியம் (பாகவதம் 6/2/10) அதன் கருத்த: பகவந் நாமாவை எப்போதும் எங்கும் சொல்லி வருபவனை பகவான் தன்னை சேர்ந்தவனாக நினைத்துக் கொண்டு அவனை எல்லாக் கோணத்திலும் காப்பாற்றுவது என்று கங்கணக் கட்டிக் கொண்டிருக்கிறார்.