பதிவு செய்த நாள்
30
அக்
2018
02:10
‘ஜன்மாத்ரே பவேத் புண்யம் லபேத் பாகவத ஸ்ரவணம் ’ என்கிற படி ஸ்ரீமத் பாகவத ச்ரவணம் மிகவும் உயர்வாக கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீமத் பாகவதத்தின் ச்ரவணம் அல்லது கீர்த்தனத்தின் பிரயோஜனம் பக்தி, ஞானம், வைராக்யம் இம்மூன்று தான்.
இந்தக் கருத்தைப் பல இடங்களில் ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. ஸ்வாமிகள் இந்தக் கருத்தை ஒட்டியே மூல கிரந்த பாராயணத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இந்த முறையில் கீர்த்தனமான மூல பாராயணம் மற்றும் பிரவசனம் மூலம் ஆச்திகர்களுக்கு ச்ரவண தானம் செய்தார். பகவத் விஷயம் இவரிடம் ச்ரவணம் செய்தவர்கள் பலர் நல்வழி வகுத்துக் கொண்டு, கூடியவரை இந்து தர்மத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தவிர பகவத் கதா தானத்தில் கீர்த்தனம் செய்பவருடைய பக்தி, ஞானம், வைராக்யம் பெருகுவதுடன் கேட்பவர் பாபம் விலகுகிறது என்று ஸ்ரீமத் பாகவதமே கூறுகிறது. இந்த உண்மைகளுக்குச் சான்றாக திகழ்ந்தவர் நம் ஸ்வாமிகள்.
ஸன்யாசி ஸத்புருஷர் இருவரும் வெவ்வேறுவகைப் பட்டவர். சன்யாஸம் இந்து தர்மத்தின் நியதி. ஸத்புருஷர் ஸ்வாபாவிகமாக ஈச்வரனை பஜித்து, பக்தி, ஞானம் மற்றும் வைராக்யத்தின் எல்லையை அடைந்தவர். ஸ்வாமிகள் சன்யாஸி மட்டும் அல்ல. ஒரு ஸத்புருஷரும் கூட, இவர் அற்புதங்கள் ஒன்றும் நிகழ்த்தவில்லை. ஆனால் தன் பிரவசனங்கள், சகஜ நடவடிக்கை, எளிய வாழ்க்கை மூலம் அனே ஆப்தர்கள் வாழ்க்கையை சன் மார்க்கத்தில் திருப்பிய அற்புதம் நிகழ்த்தினார். மற்றும் தன்னை ஓர் குருவாக என்றும் உருவகப்படுத்தியதில்லை. ஆனால் அவர் பிரவசனங்களை ச்ரவணம் செய்தவர்கள், அவரது வாழ்க்கை முறையை நேரில் கண்டவர்கள் அவரை மானஸீகமாக குருவாக ஸ்வீகரித்து அவருக்கும் வந்தனம் செய்கின்றனர்.
ஸ்வாமிகளுக்கு 1994 நவம்பரில் (ஏதூஞீஞுணூஞச்ஞீ Mஞுஞீடிஞிடிtடி ஏணிண்ணீடிtச்டூ ல்ஆதூணீணிண்ண் குதணூஞ்ஞுணூதூ)நடந்தது. அதற்கு பிறகு உடம்பில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு 5, 6 மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி இருந்தது. அதிலிருந்து பாராயணங்களை நிறைய செய்ய முடியாமல், சில முக்கிய காலங்களில் மட்டும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹபாராயணம், ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம் செய்து வந்தார். 2000 ஜனவரியிலிருந்து கண்களில் பார்வையும் குறைந்து வந்ததால் முடிந்த பாராயணங்களை மட்டும் கொஞ்சமாக செய்து வந்தார் குருவாயூரப்பன் தரிசனம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று ரொம்ப ஏக்கத்துடனே இருந்து வந்தார். தரிசனத்திற்காக முடிந்தவரையில் மனதினால் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். 2002 லிருந்து உடல் நலம் மிகவும் கடினமாக இருந்ததால் தன் பேச்சையும் குறைத்துக் கொண்டு நாம ஜபத்திலும், த்யானத்திலேயும் நேரம் கழித்து வந்தார். மற்றவர்கள் அவர் சன்னதியில் செய்த பாராயணங்களை ச்ரவணம் செய்து வந்தார்.
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் கூடும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் க்ருஷ்ணனின் திருவடிகளையும் எதிர்பார்த்து கொண்டிருந்தார். மாதாவான அம்பிகையின் திருவடிகளையும் எதிர்பார்த்து கொண்டிருந்தார். தாய் அழைக்க, லோகபிதா திருவடிகளை காண்பிக்க சுபானு வருஷம் உத்தராயணம் தை மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி மஹா பிரதோஷ தினம் (19/01/2004) அன்று மாலை 4.10 மணியளவில் க்ருஷ்ணன் திருவடிகளைச் சேர்ந்தார். ஒரு ஸத்புருஷர் திருவல்லிக்கேணியில் ஸித்தி அடைந்தார்.
ஆங்கரைஜ்யோதி ஸ்வாமிகள் இவ்வுலகிலிருந்து மறைந்தார். ஆனால் அனேகம் ஆப்தர்கள் இருதயத்தில் பக்தி ச்ரத்தை அனுஷ்டானம் மற்றும் ஆத்ம விசாரம் என்னும் தீபத்தை ஏற்றிவிட்டே மறைந்தார். பிரவசன தானம் என்னும் உயர்ந்த தர்மத்தை வளர்த்து விட்டும். ஆப்தர்களிடையே ஸ்ரீமத்ராமாயண, ஸ்ரீமத் பாகவத, ஸ்ரீமந் நாராயணீய பாராயணம் என்னும் ஸத் பிரவ்ருத்தியை ஏற்படுத்திவிட்டும் மறைந்தார். ஸ்வாமிகளிடம் மிக்க பக்திகொண்ட விச்வநாதய்யர் அவர்களால் 1994 லேயே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு (திருச்சி ஜில்லா கரூர் வழியில் 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் பழூர் என்ற கிராமத்தில் அக்ரஹாரத்தில் கிழக்குக் கோடியில்) ஸ்வாமிகளின் திவ்ய சரீரத்தை கொண்டு சென்று 20/01/2004 அன்று மத்யான வேளையில் எல்லா சாஸ்திர மரியாதைகளுடன் (அபிஷேகம், பூஜை, ஊர்வலம் முதலியவைகளுடன்) ஸமாதியில் அமர்த்தப்பட்டார். பல இடங்களிலிருந்தும் நிறைய பக்தர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அதன் பிறகு பிராம்மண ஸமாராதனையும், அன்னதானமும் நன்றாக நடந்தது.
அதன் பிறகு ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் ஒரு வருஷம் மாதாமாதம் ஆராதனையும் க்ரமமாக நடந்தது. பிறகு வருஷா வருஷம் ஸ்வாமிகள் ஸித்தி அடைந்த திதியின் போது வருஷ ஆராதனை பிராம்மண சமாராதனை, அன்னதானம், ஸ்ரீமத்பாகவத ஸப்தாஹ மூல பாராயணம், அதிஷ்டானத்தில் விசேஷ அபிஷேகம், ஸ்வாமிகளின் பட ஊர்வலம் முதலியவைகளுடன் சாஸ்திரப்படி விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பழூர் அக்ரஹாரத்தில் உள்ள எல்லா கிரஹஸ்தர்கள், ஸ்த்ரீகள், குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் ஸ்வாமிகளுக்கு தங்கள் ஊரில் அதிஷ்டானம் அமைந்ததைப் பற்றி ரொம்ப சந்தோஷம், ஆராதனை கார்யங்கள் எல்லாவற்றிற்கும் தங்களால் முடிந்த கைங்கரியங்களை இன்றளவும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் ஷட்கோணத்தில் கர்ப்பகிரஹமும், கோபுரமும் நிர்மாணம் செய்து காசி பாணத்தோடு மஹாலிங்க மூர்த்தி ப்ரதிஷ்டை செய்து (15/12/2004) தாரண வருஷம் கார்த்திகை மாதம் திருவோண நக்ஷத்திரத்தன்று கும்பாபிஷேகம் நடந்தேறியது. மஹாலிங்க மூர்த்திக்கு தினசரி அபிஷேகம், பூஜை, நைவேத்யம் முதலியவைகள் பக்தி ச்ரத்தையுடன் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்வாமிகள் ப்ரம்மீபூதராய் ஸித்தி அடைந்து அதிஷ்டானத்தில் ஸான்னித்யத்துடன் இருந்து வருகிறார்.
ஸ்வாமிகள் அனுதினமும் சுமார் 35 வருஷங்கள் பூஜை செய்து வந்த குருவாயூரப்பன் பஞ்சலோகவிக்ரஹமும், காஞ்சி காமகோடி மஹா பெரியவாளின் பாதுகைகளும் இதோ அதிஷ்டானத்தில் ப்ரதிஷ்டை செய்யப் பெற்று தினசரி பூஜையும் நடந்து வருகிறது.