அழகான பெண்களை ’அட்டகாசமா இருக்காப்பா!’ என்று சொல்வர். உண்மையில் இது விளையாட்டு அல்ல. பொதுவாக வயிறுப்பகுதி மூன்றாக மடியும். அதில் இரண்டாவது மடிப்பிற்கு ’அட்டஹாசம்’ என்று பெயர்.
சிவனின் மாமனரான தட்சன் நடத்திய யாகத்திற்கு தன் மருமகன் சிவனை அழைக்காததால், யாகத்தீயில் குதித்து உயிர் விட்டாள் பார்வதி. மனைவியின் உடலைச் சுமந்தபடி ருத்ரதாண்டவம் ஆடினார் சிவன். அப்போது பார்வதியின் உடலுறுப்புகள் பூமியில் 51 தலங்களில் விழுந்தன. அவை சக்தி பீடங்கள் எனப்பட்டன. அதில் வயிறுப்பகுதி விழுந்த இடம் அட்டஹாசம். இப்போது இது மேற்கு வங்காளத்திலுள்ள பிரத்யும்னம் சிருங்களாதேவி கோயிலாக திகழ்கிறது.