திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சேலம் கந்தாஸ்ரமம், கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியிலுள்ள தன்வந்திரி கோயில், கேரளாவிலுள்ள நெல்லுவாய் ஆகிய இடங்களில் தன்வந்திரி கோயில் உள்ளது. நெல்லுவாயிலுள்ள கோயிலில் சுவாமியின் கைகளில் சங்கு, சக்கரம், மூலிகை, அமுதக்குடத்துடன் மாம்பூவும் உள்ளது. நோய்கள் தீரவும், ஆயுள்விருத்திக்கும் இவரை வழிபடுகின்றனர்.