பொருள்: நல்லவர்களும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்ற உண்மையை உணர்த்தவே பூமியில் மனித வடிவில் ராமனாக அவதரித்தீர்கள். கையில் சக்கரம் தாங்கி நிற்பவரே! நல்ல குணங்களின் இருப்பிடமாகத் திகழ்பவரே! குருவாயூரப்பனே! உமது அருளால் எனக்கு ஏற்பட்ட நோய், குறைகளைப் போக்குவீராக.