கவிஞர் கீர்த்திவாசர் எழுதிய ’வங்காள ராமாயணத்தில்’ சிவன் சீதையாகவும், திருமால் ராமனாகவும் பிறந்ததாக உள்ளது. ராமனுக்கும், சீதைக்கும் வங்காள முறைப்படி திருமணம் நடந்தது என்றும், ராமாவதாரம் முடிந்ததும் பூலோகத்தில் மீண்டும் கிருஷ்ணராக அவதரிக்கும்படி வேண்டிக் கொண்டவர் படகோட்டி குகன் என்றும் அவர் கூறியுள்ளார்.