நடராஜரின் நடனத்தை காண சிவத்தலமான சிதம்பரத்திற்கு தேவர்கள், எமன், அவரது உதவியாளர் சித்திர குப்தன் வந்தனர். தங்கத்தால் வேயப்பட்ட நடராஜர் சன்னதியின் விமானத்தை ’பொன்னம் பலம்’ என்பர். இதிலுள்ள தங்கத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் யாராவது அதன் மீது கை வைத்தால் தண்டிக்கவே எமன் இங்கு வந்ததாகச் சொல்வர். இக் கோயிலில் சண்முகர் சன்னதிக்கு அருகில் எமன் சன்னதி உள்ளது.