திங்கட்கிழமையை சமஸ்கிருதத்தில் ’சோம வாரம்’ என்பர். ஸ+உமா என்பது இணைந்து ’ஸோம’ என்றானது. உமையவளுடன் சேர்ந்த சிவபெருமானையே ’சோமன்’ என்று குறிப்பிடுவர். எனவே அவருக்குரிய திங்கட்கிழமையில் வழிபடுவது சிறப்பு. இந்நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் மனபலம், உடல்பலம் அதிகரிக்கும்.