Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காளிங்கநர்த்தனர்
  ஊர்: ஊத்துக்காடு
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

-



 
     
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி  
     
 தல சிறப்பு:
     
  சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் விக்கிரகத் திருமேனி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல்10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில் ஊத்துக்காடு, கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய ஸ்தலம் இது.  
     
 
பிரார்த்தனை
    
  தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக, நினைத்த காரியம் நிறைவேற இங்குள்ள கண்ணனை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள உற்சவருக்கு கொழுசு சாற்றி வழிபடுவது சிறப்பு. 
    
 தலபெருமை:
     
  ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய ஸ்தலம் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும்; பாடுவதில், ஆடுவதில், வாத்தியக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்புபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்ல... நினைத்த காரியம் இனிதே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள் ! உத்ஸவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது சிறப்பு. சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, வியப்பின் உச்சம் ! ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாள், ஸ்ரீகிருஷ்ணரின் ஜெயந்தித் திருநாள். சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.  
     
  தல வரலாறு:
     
  தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் இருந்தது. சிவனார் மீது கொண்ட பக்தியால், தினமும் பூக்களைப் பறித்து, அங்கேயுள்ள கயிலாசநாதருக்குச் சமர்ப்பித்து பூஜித்து வந்தது, காமதேனு. அந்த ஊரில் ஏராளமான பசுக்கள் இருந்ததால், அது ஆவூர் எனப்பட்டது. பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடம், கோ வந்த குடி ஆனது. அதுவே பிறகு கோவிந்தக்குடி என்றானது. அதே போல் பட்டி பசு, சிவனாருக்கு பூஜை செய்த ஊர் பட்டீஸ்வரம் எனப்பட்டது. இத்தனை ஊர்களிலும், ஊத்துக்காடுதான் காமதேனுவின் விருப்பமான தலமாக இருந்தது; காமதேனுவின் சுவாசமாகவே திகழ்ந்தது. எனவே, தேனுசுவாசபுரம் என்றும், மூச்சுக்காடு என்றும் அழைக்கப்பட்ட அந்த ஊர், இன்று ஊத்துக்காடு எனப்படுகிறது. நாரதர் இங்கு வந்து, இங்கே இருந்த பசுக்களிடம் ஸ்ரீகிருஷ்ணரின் கதையைச் சொன்னார். அப்போது, காளிங்கன் எனும் பாம்பின் தலையில் நர்த்தனமாடி, அவனையும் அவனுடைய ஆணவத்தையும் அடக்கிய கதையை நாரதர் விவரிக்க... சிவ பக்தியோடு, மாயக்கண்ணன் மீதும் பக்தி கொண்டு வணங்கியது, காமதேனு. அவனுடைய புல்லாங்குழல் இசையைக் கேட்க வேண்டும் என்றும், அவனைத் தரிசிக்க வேண்டும் என்றும் ஏங்கித் தவித்தது. பசுவின் கோரிக்கையைக் கேட்காமல் இருப்பானா ஆயர்குலத்தோன் ?! வேணுகானம் இசைத்தபடி, அங்கேயுள்ள நீரோடையில் காட்சி தந்தான் கண்ணன். அத்துடன், காளிங்கத்தில் நர்த்தனமாடுகிற கோலத்தையும் காட்டி அருளினான். பின்னாளில் இதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன், காளிங்கநர்த்தனருக்கு இங்கு கோயில் அமைத்தான் என்கிறது ஸ்தல புராணம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் விக்கிரகத் திருமேனி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar