Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமலிங்கசுவாமி
  அம்மன்/தாயார்: பர்வதவர்த்தினி
  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
  ஊர்: பாபநாசம்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, நவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை  
     
 தல சிறப்பு:
     
  கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசிக்க முடியும். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், அதுவும் மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலம் இத்தலமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில், பாபநாசம் 614 205 தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 97901 16514 
    
 பொது தகவல்:
     
  கோயில் வளாகத்தில் ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் இருவரும் அருகருகில் வணங்கியபடி நிற்கின்றனர். ராமபிரான், சீதையை மீட்க உதவி செய்தவர் என்பதன் அடிப்படையில் சுக்ரீவரை பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஒரே சன்னதியில் காசி விசாலாட்சி, அன்னபூரணி, மற்றொரு சன்னதியில் அருகருகில் காலபைரவர், சனீஸ்வரர், சூரியபகவானும் உள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  அறியாமல் செய்த பாவம், பித்ருதோஷம் நீங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

விசேஷ சிவாலயம்: மேற்கு நோக்கிய கோயில்களில் சக்தி அதிகம் என்பர். எனவே, அங்கு வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள், விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்ததுடன், இங்குள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இங்கு ஒரே இடத்தில் தரிசனம் செய்ய, 108 சிவன் கோயில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிரதான சன்னதியில் ராமலிங்க சுவாமி இருக்கிறார். இவருக்கு வலப்புறமுள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள் உள்ளன. அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் இங்கு பிரதான மூலஸ்தானம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாமே பூ போட்டு வேண்டிக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.


கோமாதாவிற்கு பிரதோஷம்: சிவனின் வாகனமான நந்திதான், சுவாமி சன்னதி எதிரில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் நந்தியும், காமதேனுவும் இருக்கிறது. ராமபிரான், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு காமதேனு செய்தார். அதற்கு அகத்தியரே, பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தற்போதும், பிரதோஷ வேளையில் அகத்தியர் பூஜை செய்வதாக ஐதீகம். காமதேனு சிலை, கழுத்தில் சலங்கைகள் அணிந்து, சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி வடிக்கப்பட்டுள்ளது.


சிவராத்திரி சிறப்பு: ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர். சிவராத்திரி விழா இங்கு விசேஷமாக நடக்கும். அன்றிரவு முழுதும் 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு மட்டும் ருத்ராபிஷேகம் செய்வர். அவ்வேளையில், பக்தர்கள் கோயிலை 108 முறை சுற்றி வருவர். இந்த வைபவம் விசேஷமாக நடக்கும். ஐப்பசி பவுர்ணமியிலும் 108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.


அனுமன், சுக்ரீவன்: ராமபிரான் பாவம் நீங்கப்பெற்றதால் தலத்திற்கு "பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த பாவம், பித்ருதோஷம் நீங்க இங்கு சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். மார்கழி திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு. கோயில் வளாகத்தில் ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் இருவரும் அருகருகில் வணங்கியபடி நிற்கின்றனர். ராமபிரான், சீதையை மீட்க உதவி செய்தவர் என்பதன் அடிப்படையில் சுக்ரீவரை பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஒரே சன்னதியில் காசி விசாலாட்சி, அன்னபூரணி, மற்றொரு சன்னதியில் அருகருகில் காலபைரவர், சனீஸ்வரர், சூரியபகவானும் உள்ளனர்.


 
     
  தல வரலாறு:
     
  இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும், தங்களை பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக, இங்கு 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தன் தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் "ராமலிங்கசுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் "அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. பர்வதவர்த்தினிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசிக்க முடியும். ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், அதுவும் மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலம் இத்தலமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar