Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காளஹஸ்தீஸ்வரர்
  அம்மன்/தாயார்: ஞானாம்பிகை
  ஊர்: புரசக்குடி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அன்னாபிஷேகம், சிவராத்திரி, பிரதோஷம்  
     
 தல சிறப்பு:
     
  ஞானம் பெற இங்குள்ள ஞானாம்பிகையை வழிபடுவதும், இங்குள்ள தட்சிணாமூர்த்தி விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று உள்ளதும் தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், அய்யம்பேட்டை சூலமங்கலம் தொலைவில் புரசக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர்.  
   
போன்:
   
  +91 99411 28535, 90252 58547 
    
 பொது தகவல்:
     
  இங்கு பைரவர், சூரிய பகவான், சந்திர பகவான், சனி பகவான், ஆஞ்சநேயர், விநாயகர், வரதராஜ பெருமாள், முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் குடி கொண்டுள்ளன. பிராகாரத்தில் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி குடி கொண்டுள்ளார்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபட்டால் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் இங்குள்ள சுவாமிக்கு பால், தேன் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பலிபீடம், நந்திதேவர் தாண்டி நடந்தால் கிழக்குப் பார்த்து தரிசனம் தருகிறார் காளஹஸ்தீஸ்வரர். அழகான லிங்கத் திருமேனி. பிரதோஷ தினங்களில் இங்கு வழிபாடு நடக்கிறது. இவர் தவிர காசி விஸ்வநாதர், விஸ்வக்ஞானர் என்கிற திருநாமத்துடன் மேலும் இரு லிங்கத் திருமேனிகள். தெற்கு நோக்கிய ஞானாம்பிகை. சகல ஞானத்தையும் தருபவள். மற்ற சிவாலயங்களில் தரிசிக்கக் கிடைக்கும் மூர்த்தியைப் போல் இல்லாமல் இங்கு வித்தியாசமாக தரிசனம் தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இவரது விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. நின்ற நிலையில் இருகரம் கூப்பி வணங்கிய நிலையில் மீசை, தாடியுடன் இடுப்புக்குக் கீழாக அரை ஆடை அணிந்து இந்த அடியவர் காணப்படுகிறார். இந்த சிற்பம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியது என்று சொல்லப்படுகிறது. எனவே, 13-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட அந்த மன்னனின் வடிவம்தான் இது என்று கருதவும் இடம் உண்டு என்கிறார்கள்.  
     
  தல வரலாறு:
     
 

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரசக்குடியில் வாழ்ந்தவர் ராமய்யர். மிகவும் ஆச்சாரமான குடும்பம். அந்தக் காலத்தில் புரசக்குடியில் அந்தணங்கள் பெருமளவில் வசித்து வந்தனர். வேத வித்துக்களாக அவர்கள் விளங்கினார்கள். அதிகாலையில் எழுந்து ஆற்றங்கரையில் ஸ்நானம் செய்து அனுஷ்டானங்களை முடித்து வீடு திரும்புவார்கள். வீட்டில் அமர்ந்து அட்சர சுத்தமாக வேதம் சொல்லுவார்கள். பிறகு, காலை ஆகாரத்தை முடித்து விட்டு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வயல்களுக்குச் சென்று விளைச்சலைப் பார்வையிடுவார்கள். இதுதான் அவர்களது வாடிக்கை. ராமய்யரும் அப்படித்தான். ராமய்யருக்கு சுப்பிரமணியன், சந்திரசேகரன் என்று இரு மகன்கள். இவர்களில் சந்திரசேகரன் - பார்வதி அம்மையார் தம்பதிக்குப் பிறந்தவர்தான் வேங்கடராமன் எனும் சி.வி. ராமன். ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு கல்கத்தா போய் நிதித்துறை படிப்பு முடித்தார் சி.வி.ராமன். பிறகு, அறிவியல் ஆய்வில் மூழ்கி விட்டார். உலகின் மிகப் பெரிய விருதான நோபல் பரிசை 1929-ல் பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ விருதாகக் கொடுத்த சர் பட்டம்தான் இவருடைய பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

புரசக்குடியைச் சேர்ந்த சி.வி. ராமன் மட்டும் நோபல் பரிசு வாங்கவில்லை. இதே ஊரைச் சேர்ந்த இன்னொருவரும் நோபல் பரிசு வாங்கி இருக்கிறார் என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. அந்த இன்னொருவர் -சந்திரசேகரன். இவர் சர். சி.வி. ராமனின் அண்ணனாக சுப்பிரமணியத்தின் மகன் ஆவார். நட்சத்திரங்கள் பற்றிய இயற்பியல் ஆய்வுக்காக வில்லியம் பவுலர் என்ற அமெரிக்கருடன் இணைந்து நோபல் பரிசு பெற்றவர் சந்திரசேகரன். ஆக, புரசக்குடியைச் சேர்ந்த இருவர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஞானம் பெற இங்குள்ள ஞானாம்பிகையை வழிபடுவதும், இங்குள்ள தட்சிணாமூர்த்தி விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று உள்ளதும் தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar