தன்னை நாடி வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் குறைகளை குறிப்பாக சிறுவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் இந்த இறைவனுக்கு நிகரில்லை என்று பக்தர்கள் மெய் சிலிர்த்துக் கூறுகின்றனர்.
இங்கு சிறு குழந்தைகளே பக்தர்களாக வேண்டிக் கொள்வதும் புதுமையாக உள்ளது. இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழையும் முன் இடதுபுறம் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கையை நாம் கண்குளிர தரிசனம் செய்யலாம். பொதுவாக தேவகோட்டத்தின் தென் திசையில் அருள்பாலிக்கும் துர்கை, இங்கு கோயிலின் நுழைவாயிலிலேயே வடதிசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அழகே அழகு. சிறிய தனி மண்டபத்தில் அருள்பாலிக்கும் துர்கையை வணங்குவோர் சற்றே குனிந்து பார்த்தால்தான் அன்னையின் முழு உருவமும் தெரியும். அதாவது தன்னைப் பார்த்து தலை வணங்குபவர்களுக்கே அன்னை தரிசனம் தருகிறாள் என்பது உண்மை.
இங்கு இறைவனுக்குக் காவி உடையே உடுத்தப்படுகிறது. வெள்ளை உடையை பக்தர்கள் கொடுத்தாலும் அதை காவியில் நனைத்து, காவியாக்கி, பிறகே இறைவனுக்கு அணிவிக்கின்றனர். இதனால் இந்த இறைவனுக்கு சன்னியாசி அப்பன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. பல நூறு ஆண்டுகளைக் கடந்த ஆலயம் இது. இங்கு அம்மனோ, நவக்கிரகங்களோ கிடையாது. சித்திரை முதல் நாளில் இறைவன் வீதியுலா வருவதுண்டு.
பல ஆண்டுகளாக இங்கு உயிர்பலி தரும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தற்போது சில ஆண்டுகளாக அந்தப் பழக்கம் அறவே நிறுத்தப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வடக்குத் திசை. |