அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ராஜகோபால சுவாமி |
|
உற்சவர் | : |
ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன் |
|
அம்மன்/தாயார் | : |
செங்கமலவல்லி, ருக்மணி, சத்யபாமா |
|
ஊர் | : |
கும்பகோணம் |
|
மாவட்டம் | : |
தஞ்சாவூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
மகாமகத்தை ஒட்டி ராஜகோபாலசுவாமி தாயாருடன் காவிரிக்கரைக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். ஒவ்வொரு மகாமகத்தை ஒட்டியும் இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். சப்த நதிகளுக்கு இந்த கோபாலன் அருள்பாலித்ததாக நம்பிக்கை. எனவே மகாமகத்தன்று இவரை அவசியம் வழிபட வேண்டும். |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்கு மாடு மேய்க்கும் அரிய கோலத்தில் பெருமாளை தரிசிக்கலாம். அவரது புல்லாங்குழல் இசைக்கு மயங்கிய பசு அவரது பின்னால் நிற்கிறது. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 7 மணி முதல் மதியம்12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில்,
பெரிய பஜார்தெரு,
கும்பகோணம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 93443 34246 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
தாயார் செங்கமலவல்லி தனி சன்னதியில் அமர்ந்திருக்கிறார். ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன், உற்சவராக எழுந்தருளி உள்ளார். செங்கமல தாயாரின் உற்சவர் சிலையும் உள்ளது. சந்தானகிருஷ்ணனும் அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
இவரை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல மைந்தன் அமைவான். ராஜகோபால சுவாமியை சேவித்தால் எப்பேர்ப்பட்ட பீடையும் நீங்கிவிடும். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
ராஜகோபாலருக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
ராஜகோபால சுவாமியை வணங்கினால் எப்பேர்ப்பட்ட பீடையும் நீங்கிவிடும். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்த கண்ணன் தன் நண்பர்களுடன் மாடு மேய்க்கும் பணியை செய்துவந்தான். அவனது புல்லாங்குழல் ஓசைக்கு மாடுகள் அனைத்தும் மயங்கி நிற்கும். இந்த மாடுகளை, மக்களாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். கண்ணனுக்கு, நாம் அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் வகையிலேயே அவரது மாடு மேய்க்கும் பணி அமைந்தது.
கோகுலத்து வீடுகளில் உள்ள வெண்ணெயை திருடி தானும் உண்டு, தன் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வான் கண்ணன். இந்தச் செயலை சாதாரண திருட்டுகளோடு ஒப்பிட்டு, திருடுவதை நியாயப்படுத்தக்கூடாது. பொருள் அதிகமாக வைத்திருப்போர் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இறைவனே அதை செய்வார் என்பதே இதன் தாத்பர்யம். கும்பகோணத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் மாடு மேய்க்கும் நிலையில் கண்ணன் காட்சி தருகிறார். கோ மேய்ப்பவன் ராஜா ஆவான் என்பதை நிரூபிக்கும் வகையில். ராஜகோபாலன் என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு மாடு மேய்க்கும் அரிய கோலத்தில் பெருமாளை தரிசிக்கலாம். அவரது புல்லாங்குழல் இசைக்கு மயங்கிய பசு அவரது பின்னால் நிற்கிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|