|
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் |
|
அம்மன்/தாயார் | : |
அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி |
|
தீர்த்தம் | : |
எம தீர்த்தம் |
|
புராண பெயர் | : |
மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் |
|
ஊர் | : |
கருக்குடி |
|
மாவட்டம் | : |
தஞ்சாவூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
| | | | காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்)திருக்கோயில்,
கருக்குடி,
மருதாநல்லூர்-612 402
கும்பகோணம் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91- 99435 23852 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணால் செய்யப்பட்டது. மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகம், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர்.
அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும்.
அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு.
தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|