Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்
  அம்மன்/தாயார்: ஞானாம்பிகை, பெரிய நாயகி
  தல விருட்சம்: பலாசு, வில்வம்
  தீர்த்தம்: ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம்
  புராண பெயர்: திருமயானம், திருநாலூர் மயானம், நாத்தூர்
  ஊர்: திருமெய்ஞானம்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தேவாரபதிகம்



பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென் அத்தனடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.



-திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 96வது தலம்.



 
     
 திருவிழா:
     
  தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி, மாசி, மார்கழி மாதங்களில் உற்சவம் நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 159 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் - 612 605 குடவாசல் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 94439 59839 
    
 பொது தகவல்:
     
  இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக் கலைப்பணியைச் சேர்ந்தது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது. சிகரம் உருண்டை வடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை.


 
     
  தல வரலாறு:
     
 

 சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று.


மற்ற மூன்றும்
1. கச்சி மயானம்,
2. கடவூர் மயானம்.
3. காழி மயானம் என்பவை.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar