Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜம்புநாத சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஜம்புநாத சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜம்புநாத சுவாமி
  அம்மன்/தாயார்: அலங்காரவல்லி
  ஊர்: நல்லிச்சேரி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  சப்தகன்னியரில் வைஷ்ணவி வழிபட்ட தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் நல்லிச்சேரி, அய்யம் பேட்டை, தஞ்சாவூர்.  
   
    
 பொது தகவல்:
     
  இரண்டை விநயாகரின் இடதுபுறம் அதிகார நந்தி, அருகே வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் பிரதான தெற்கு வாயிலை நோக்கிய வண்ணம் அன்னை அகிலாண்டேஸ்வரி, சிலா ரூபத்தில் திருவானைக் கோயிலைக் காட்டிலும் சற்றே உயரம் குறைந்தவளாகக் காணப்பட்டாலும், விழிகளில் திரளும் அருளொளி முகத்தினில் தவழும் சாந்தம் மட்டும் குறைவுபடவே இல்லை. அன்னையின் கருவறைக்குப் பின்புறம் மகாலட்சுமி. வெளிச்சுற்றுகளில் நவக்கிரகங்கள், பைரவர் சன்னதி, தனியாக சனீஸ்வரர்  சன்னிதி, சண்டிகேஸ்வரர், குரு தட்சிணாமூர்த்தி சன்னதிகள், தட்சிணாமூர்த்திக்கு எதிரே ஆதிசங்கரர். விஷ்ணு துர்க்கை  சன்னதி, இக்கோயிலில் வெகு வசேஷம்.  
     
 
பிரார்த்தனை
    
  கஷ்டங்கள் நீங்கவும், வாழ்வில் செல்வம் நிலைத்திருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புநாத சுவாமி கோயிலுக்கு இரு வாசல்கள். மேற்கு வாசல் (ஜம்புகேஸ்வரர் சன்னிதி எதிரே) விழாக் காலங்களில் தவிர ஏனைய எல்லா நாட்களிலும் பூட்டியே தவக்கப்பட்டிருக்கும். அகிலாண்டேஸ்வரிக்கு எதிரான தெற்கு வாசல்தான் திருக்கோயிலின் பிரதான வாசல், இங்கு அகிலாண்டேஸ்வரி தெற்கு பார்த்து நின்ற கோலத்தில் தரிசனம் அருள்கிறாள். ஜம்புகேஸ்வரர் மேற்கு பார்த்து அமைந்துள்ளார். பிரதான தெற்கு வாசலின் வழியாக உள்ளே நுழைகிறோம். உள்ளே நுழைந்ததும் கண்களில் படுபவர் இரட்டை விநாயகர். ஒருவர் நிக்கிரக விநாயகர், இன்னொருவர் அனுக்கிரக விநாயகர், ஒருவர் நமக்கு இடையூறுகளை, கஷ்டங்களை ஏற்படுத்தித் தருபவர். இன்னொருவர் நம்முடைய துன்பங்களை, துயரங்களை நீக்குபவர். அதனால் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இந்த இரண்டை விநாயகருக்கு ஏக மதிப்பு! இனமேலும் எந்தக் கஷ்டத்தையும் தந்துவிடாதே என்று நிக்கரக விநாயகரிடமும், இதுவரை தந்துவரும் கஷ்டங்களைப் போக்கிவிடு என்று அனுக்கிரக விநாயகரிடமும் தோப்புக்கரணம் போட்டு வேண்டிக் கொள்கிறார்கள்.

வைஷ்ணவி தேவி எனப்பபும் நல்லிமங்கை. ஈஸ்வரனையும் அம்பாளையும் வழிபட்ட தலம். அப்போது அம்பாளுக்கு சிவபெருமான், தனது திருக்கழல் திரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள், மடந்தைப் பருவத்தினளாய்(வயது 18) காட்சி அளித்துள்ளாள், நல்லிமங்கை எனப்படும் வைஷ்ணவி தேவி வழிபட்ட திருத்தலத்தில் விஷ்ணு துர்க்கைக்கு தனிச் சிறப்புகள் இருக்கத்தானே செய்யும்!

நந்திதேவர், சிவனை வழிபடும் புடைப்புச் சிற்பம் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. திருமழபாடியில் நந்திதேவருக்குத் திருமணம். திருவையாறில் நந்திதேவருக்கு பஞ்சாட்சர உபதேசம். அந்த பஞ்சாட்சர ஜபம் முழுமை பெற்று, நந்திதேவர் சித்தியடைந்த தலம் நல்லிச்சேரி. நெல்லுச்சேரியாக இப்பகுதி திகழ்ந்ததற்குச் சான்றாக, குடமுருட்டியிலிருந்து பிரிந்துவரும் சோற்றுடையான் ஆறும் அதன் வாய்க்கால்களும் நெடாறு அருகே பிரிந்தோடி வரும் ஆறும் ஜம்பு நதியாக சுற்றிச் சுழன்று ஓடிக் கொண்டிருக்கின்றன.

இரட்டை விநாயகர் சன்னிதிக்கு வெளியே மேல் விதானத்தில் நந்தி வழிபடுவது, விநாயகர் கனி பெறுவது, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் போன்ற ஓவிய வண்ணப்படங்கள் அணி வகுக்கின்றன. இரட்டை விநாயகருக்கு சற்று தள்ளி எதரே அமைந்துள்ளது. ஜம்புகேஸ்வரர் சன்னதி. தூரத்தே இருந்து அவரது பார்வையில் படுகிறது மயானம். காசியைப் போல மயானம் நோக்கிய சிவன் இவர். தல விருட்சம் நாவல் மரம் அதன் பழங்களை நாவல் பழம் என எவரும் சொல்வதில்லை. ஜம்பு பழம் என்றே குறிப்பிடுகின்றன. கோயிலுக்கு அருகே தேவகாத தீர்த்தம் குளம். கோயிலின் உள்ளே ஜம்புகேஸ்வரர் சன்னிதி அருகே ஒரு கிணறு. எந்தக் கோடைக்கும் ஆடிக்கும் அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றுவதே இல்லை.

 
     
  தல வரலாறு:
     
  தற்போது நல்லிச்சேரி என்றழைக்கப்படும் கிராமத்தின் பெயர் இதற்கு முன் பல பெயர்களைப் பூண்டிருக்கிறது. அவற்றுக்குள் வரலாற்றுத் தகவல்களும் புதைந்துள்ளன. நந்தி தேவர் இங்கு வந்து வழிபட்டுள்ளார் அதனால் நந்திகேஸ்வரம். ஒரு காலத்தில் நடுவுச்சேரி என்று பெயர், பின்னர் அதுவே நெல்லுச்சேரி என்றாகியுள்ளது. காரணம் கோயிலைச் சுற்றிலும், ஊரைச் சுற்றிலும் வயல்கள், வாய்க்கால்கள் அனைத்துப் பகுதி அறுவடை நெல்லும் இங்கு கொண்டுவந்து குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனால் நெல்லுச்சேரி ஆனது. பிற்காலத்தில், நல்லிச்சேரி என்று நிலைத்துவிட்டது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சப்தகன்னியரில் வைஷ்ணவி வழிபட்ட தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar