Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிரத்யங்கிராதேவி
  தல விருட்சம்: ஆலமரம்
  ஊர்: அய்யாவாடி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்' நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம். மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி - தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 435- 246 3414, 94431 24347. 
    
 பொது தகவல்:
     
  கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.
 
     
 
பிரார்த்தனை
    
  நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உருவாகும், திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார். மூலவராக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தலவிருட்சம் ஆலமரம்.

இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம்.  பிரத்யங்கிராதேவி: இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் அட்டகாசமாக வீற்றிருக்கிறாள்.

மிளகாய் வத்தல் யாகம்: இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்' நடக்கிறது. மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம். 

மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழ வகைகளும் இதில் அடக்கம். யாகம் முடிந்ததும், புனித கலசநீரால் சரபேஸ்வரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான். காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி'க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.

அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.  இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள். தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தலவிருட்சமான ஆலமரத்தில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம். நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar