இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அஷ்டவசுக்கள் பூஜித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 73 வது தேவாரத்தலம் ஆகும்.
சப்த ஸ்தானத்தில் ஒன்று. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள்.
தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்,
திருவாலம் பொழில் அஞ்சல்,
திருப்பந்துருத்தி - 613 103.
வழி - திருக்கண்டியூர்.
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 - 4365 - 284 573, 322 290
பொது தகவல்:
கோயில் பிரகாரத்தில்மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் உள்ளனர்.
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.